Times of Puducherry

குரு பகவானுக்கு பிடித்தமான 5 அதிர்ஷ்ட ராசிகள்.! இவர்களுக்கு பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் உண்டாகும்.! சொத்துக்கள் குவியும்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 1:47 PM
five zodiac signs blessed by guru bhagavan according to vedic astrology reasons

Guru Bhagavan Favourite Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி குரு பகவானின் பூரண அருளையும், நன்மைகளையும் இயற்கையாகவே பெறக்கூடிய ஐந்து ராசிகள் உள்ளன. அதற்கான ஜோதிட காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பகவான் ஆசி பெற்ற 5 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் சுப கிரகங்களின் அதிபதியாகவும், தனம், புத்திர பாக்கியம், ஞானம், ஒழுக்கம் மற்றும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறார். “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழிக்கு ஏற்ப குருவின் பார்வை மற்றும் ஆட்சி பலம் பெற்ற ராசிகளுக்கு எப்போதும் வாழ்க்கையில் தனித்துவமான அருளும், யோகமும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியானது குரு பகவானின் ஆட்சி வீடாகும். இது குருவின் சொந்த வீடு. கால புருஷ தத்துவத்தின்படி 9 ராசியாகிய தனுசு ராசி பாக்கிய ஸ்தானம் ஆகும். எனவே தனுசு ராசிக்காரர்கள் இயற்கையிலேயே நேர்மறை எண்ணங்கள், தெய்வீக பக்தி, ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். குருவின் ஆட்சி பலத்தால் இவர்களுக்கு உயர் கல்வி, நல்ல வழிகாட்டுதல், ஆசிரியர் அல்லது வழக்கறிஞர் போன்ற மதிப்பிற்குரிய பதவிகள் எளிதாக கிடைக்கும்.

மீனம்

மீன ராசியும் குரு பகவானுக்கு சொந்த வீடாகும். காலபுருஷ தத்துவத்தின் படி 12-வது ராசி ஆகிய மீனம் மோட்ச ஸ்தானமாகும். நீர் ராசியான மீனத்தில் குரு அதிபதியாக இருப்பதால், இவர்களுக்கு இரக்க குணம், பெருந்தன்மை, கற்பனைத் திறன், பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவை அதிகம் காணப்படும். குருவின் அருளால் இவர்களுக்கு நிதி மேலாண்மை, ஆன்மீகத் தெளிவு, வெளிநாட்டு பயணங்கள் வாயிலாக நல்ல யோகம் உண்டாகும்.

கடகம்

ஜோதிட விதிகளின்படி கடக ராசியில் குரு பகவான் வரும்பொழுது அவர் உச்ச பலத்தை பெறுகிறார். கடக ராசியின் அதிபதி சந்திரனும், குருவும் நட்பு கிரகங்கள் என்பதாலும், கடகத்தில் குரு உச்சம் பெறுவதாலும் கடக ராசிக்காரர்களுக்கு சமுதாயத்தில் கௌரவம், தாயார் வழியில் நன்மைகள், சொத்து சேர்க்கை, புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும். இவர்களின் பேச்சுக்கு சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் குரு பகவானுக்கு நெருங்கிய நட்பு கிரகமாகமாவார். சூரியனின் ஆளுமைத் திறனோடு குருவின் ஞானமும் சேர்வதால் சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த நிர்வாகத் திறன், தலைமைப் பண்பு, நேர்மையான குணத்தை கொண்டிருப்பார்கள். அரசு வழியில் நன்மைகள் பெறவும் உயர் பதவிகளை அடையவும் குருவின் அருள் எப்போதும் இவர்களுக்கு துணையாக இருக்கும்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானும் குருவும் பரஸ்பரம் நட்பு கிரகங்கள் என்பதால் மேஷத்தில் குருவின் தாக்கம் சுப பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களின் சுறுசுறுப்பு மற்றும் தைரியத்திற்கு குருவின் ஞானம் நல்வழி காட்டும். இதன் காரணமாக இவர்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். தொழிலில் வளர்ச்சி, நிலம் அல்லது சொத்துக்கள் வாங்குதல், பொருளாதார ஏற்றம் ஆகியவற்றில் குருவின் பூரண ஆசி மேஷ ராசிக்காரர்களுக்கு கிட்டும்.

குறிப்பு: மேற்கண்ட ஐந்து ராசிகளும் இயற்கையாகவே குருவின் சுபத் தன்மையை பெற்றிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் குரு அமர்ந்திருக்கும் இடம், தசா புத்திகள் மற்றும் பிற கிரகங்களின் பார்வையைப் பொறுத்து பலன்களின் அளவு முழுமையாக தீர்மானிக்கப்படும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top