Times of Puducherry
கடலூர் மாவட்டத்தில் அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆக.25-ம் தேதி முதல் நெல்கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எறும்பூர், வளையமாதேவி, வீரமணி நத்தம் பெரியநெற்குணம் பரதூர்வெள்ளியக்குடி, ஒரத்தூர் ,சாத்தமங்கலம்,மதுராந்தகநல்லூர்,பூந்தோட்டம், ஓடாக்க நல்லூர், உள்ளிட்ட30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளநெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆக.25ம் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. செப். 1-ஆம் தேதி விலை உயர்வு ஏற்படும், விலை உயர்வு அறிவிக்கப்படும் என காலதாமதம் செய்த நிலையில் தற்போது செப்.5-ஆம் தேதியும் எந்த நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார்
30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்மணிகளை தரையில் கொட்டி இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர். மழை பெய்தால் இந்த நெல் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு விரைந்து நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.