Times of Puducherry
போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற்று சென்றவரை 24 மணி நேரத்தில் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர் கைது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏழாம் தேதி திண்டிவனம் நேரு வீதியில் உள்ள AVM நகை அடகு கடையில், சுமார் 26 கிராம் போலி தாலி செயினை கொடுத்து, ஒரு நபர் பொய்யான பெயர் மற்றும் முகவரி தெரிவித்து ரூ.2,75,000/- பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் நகை போலியானது என தெரியவந்துள்ளது. மேலும், இதே நபர் முண்டியம்பாக்கம் அருகே நகை அடகு கடை நடத்தி வரும் பிரகாஷ் (50) என்பவரிடம் சுமார் 25 கிராம் போலி தாலி செயினை அடகு வைத்து ரூ.2,23,000/- பெற்றுச் சென்றுள்ளார். விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்தது. விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்காமராஜ் தலைமையில் ஆன தனிப்படை,
இன்று சென்னை மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் மாதவன் வயது (48) என அடையாளம் காணப்பட்டு. கைது செய்தனர். மேலும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மகேந்திரா சான்ட்ரோ TN 11 BD 1630 மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி வழக்குகளில் மொத்தம் ரூபாய் 3,30,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.