Times of Puducherry

ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டரிடம் தங்க மோதிரங்களை நூதன முறையில் திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
6 Sep 2026 • 3:05 PM

புதுவை அடுத்த முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 81). இவர், தபால் துறையில் சப்-போஸ்ட் மாஸ்டராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். சம்ப வத்தன்று ராமகிருஷ்ணனை வழிமறித்து, மர்ம ஆசாமி ஒருவர், 2 தங்க மோதிரங் களை (1 1/2 பவுன்) கழட்டி அவரது கைக்குட்டையில் மடித்து கொடுத்து அனுப்பினார். வீட்டில் சென்று பார்த்த போது மோதிரங்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார ஆய்வு செய்து வந்தனர்.இந்தநிலையில் முதலியார் பேட்டை நூறடி சாலையில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை மறித்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாரதி (வயது 64) என்பது தெரிய வந்தது.மேலும் அவர் ராணுவத்தில் இருந்து பணி நீக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் தான் ராம்கிருஷ்ணனின் கவனத்தை திசைதிருப்பி 2 மோதிரங்களை அபேஸ் செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 2 மோதிரங்களையும்,ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட முதலியார்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் பாராட்டினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top