Times of Puducherry

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ESI விலக்கு அளிக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் தனியார் பள்ளி சங்கத்தினர் மனு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 6:42 PM
esi-mulladi-private teacher

புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ESI (தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம்) விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top