Times of Puducherry

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல்: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 8:11 PM
campaign

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்,வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து, முதல்வர் ரங்கசாமி, குண்டுபாளையம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பேசுகையில், மக்கள் யாருக்கு ஆதரவு அளித்தால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் போடும் ஓட்டு பயனுள்ளதாக இருக்க வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்த அசோக் ஆனந்த் வெற்றி பெற வேண்டும். அவருக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான ஆதரவை வழங்க வேண்டும்.

அசோக் ஆனந்த் படித்தவர், பண்பாளர். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருபவர். அவர் வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்கு மேலும் பல பணிகளை மேற்கொள்ள முடியும்’ என்றார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் அசோக் ஆனந்தனுக்கு ஜக்கு சின்னத்தில் ஒட்டுப்போடுமாறு முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top