Times of Puducherry

காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: இப்போதே விண்ணப்பீங்க!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 8:14 PM
employment-opp-engineer

தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட G.O.(2D) No.144, dated 16.09.2026-ன் அடிப்படையில், கடலூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் – 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக / குடியிருப்பாளராக இருக்க வேண்டும். விண்ணப்பததாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொது கொள்கை அல்லது தொடர்புடைய இணையான துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை ஆங்கிலம் (M.A., English) கல்வி தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,000 ஊதியத்துடன் 19 மாதங்களுக்கான பணிக்காலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கூடிய சுய விவரக்குறிப்பினை (Resume) cmgfp.cud@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் (DCCM), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் 607 001 என்ற முகவரியில் நேரடியாக 30.09.2026 க்குள் சமர்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு, MS Word, Excel, PowerPoint திறன் பெற்றிருத்தல் அவசியம். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை ஒருங்கிணைத்தல், தரவு சேகரிப்பு, அறிக்கை தயாரித்தல், களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற திறன்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top