Times of Puducherry

எனது ஆரோக்கியம், எனது பெருமை விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 10:00 PM
drugs-health-my barat kendra

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா (MY Bharat Kendra) சார்பில் போதைப்பொருள் இல்லா இளைஞர் சமூகம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் நடைபெற்ற சுகாதார மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் GNS ராஜசேகரன் துவக்கி வைத்தார்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா (MY Bharat Kendra) சார்பில்
“எனது ஆரோக்கியம், எனது பெருமை” சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மாண்புமிகு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் G.N.S. ராஜசேகரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கான பொது சுகாதார பரிசோதனை, அடிப்படை உடல்நல பரிசோதனை, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த ஆலோசனைகள், போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எனது ஆரோக்கியம், எனது பெருமை விழிப்புணர்வு முகாம்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top