Times of Puducherry

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல்: தி.மு.க வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 8:27 PM

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் கு. சேது என்கிற சேது செல்வம் – கழகத் தலைவர் மு க ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்

வருகின்ற 06.10.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக கு. சேது @ சேது செல்வம் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் சேது செல்வம் திமுக மாநில அமைப்பாளர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்தவர் அப்பொழுது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் AMH நாஜிம், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.செந்தில் குமார், வே. கார்த்திகேயன்,. அ. செந்தில் @ ரமேஷ், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top