Times of Puducherry

திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து - இரா. சிவா, ஆ. இலட்சுமணன் தீவிர வாக்கு சேகரிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 5:15 PM
dmk-campaign

தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேது என்கிற சேதுசெல்வம் அவர்களை ஆதரித்து புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மருத்துவர் இரா. இலட்சுமணன் எம்.எல்.ஏ., காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கெளதம் திராவிடமணி புதுச்சேரி மாநில கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட 31 பூத்களில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மருத்துவர் இரா. இலட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் குண்டுபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

அப்போது, அப்பகுதியில் பிரதான பிரச்சானையாக இருக்கும் சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதி, கட்டமைபபுடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், இலவச வீட்டுமனைப்பட்டா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கப்படும் என்று வாக்களர்களிடம் உறுதியளித்தும் துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ந. தங்கவேலு, ஜெ. வேலன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top