Times of Puducherry

திமுக வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் சரித்திரம் படைக்கும் - ஆர்.எஸ்.பாரதி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Sep 2026 • 7:33 PM
dmk- campaign

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் சரித்திரம் படைக்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சேது செல்வத்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கொட்டுப்பாளையம், புதுப்பேட், சுப்பையா நகர், கவுண்டம்பாளையம், பாக்குமுடையான்பட்டு, கம்பளிசாமி மடம் பகுதிகளில் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். குண்டுபாளையம் பகுதியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் சரித்திரம் படைக்கும் - ஆர்.எஸ்.பாரதி

வாக்கு சேகரிப்பின்போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, கொள்கைப் பரபரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா. சிவா, எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எச்.எம். நாஜிம், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., வானூர் சட்டமன்ற உறுப்பினர் கௌதம் திராவிடமணி, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல். சம்பத், நந்தா. டி. சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆண்களும், பெண்களும் திமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் சரித்திரம் படைக்கும் என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top