Times of Puducherry

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக நீதிக்கு எதிராக சூழ்ச்சி: புதுச்சேரியில் தி.க-வினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 3:53 PM

மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக நீதிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமை ஏற்றார் ,செயலாளர் தி.இராசா கண்டன முழக்கம் முழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, தி.க.காப்பாளர் இர.இராசு ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ. வீரமணி நிறைவுரை ஆற்றினார். திருக்குறள் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top