Times of Puducherry

இறுதி நிமிட த்ரில்லர்! மெக்சிகோவில் உலகக் கோப்பை தங்கம் வென்ற தீரஜ் பொம்மதேவரா... வரலாற்று தருணம்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 12:40 PM

மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஆடவர் ரீகர்வ் (Recurve) பிரிவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தீரஜ் பொம்மதேவரா வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் முன்னணி வில்வித்தை வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடரில், தனது சிறப்பான லட்சிய இலக்குகளினாலும் நிலைத்தன்மையான ஆட்டத்தினாலும் தீரஜ் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்லும் மிகச்சில இந்திய வில்வித்தை வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ள இவர், இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்த்துள்ளார்.

ஆடவர் ரிகர்வ் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நகானிஷியை ஷூட்-ஆஃப் (SHOOT-OFF) முறையில் வென்று அதிரடி அவரது இந்த வரலாற்று வெற்றிக்கு விளையாட்டு பிரபலங்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தீரஜ் பொம்மதேவரா பின்னணி

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தீரஜ் பொம்மதேவரா இவர் 2022 ஆசிய விளையாட்டுக போட்டி ஆடவர் ரீகர்வ் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்திய ரீகர்வ் வில்வித்தையில் மிகக் குறைந்த காலத்தில் சர்வதேச தரவரிசையில் முன்னணி இடத்தைப் பிடித்தவர். இவர் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகப் (Havildar) பணியாற்றி வருகிறார். மிக இளம் வயதிலேயே (2006 முதல்) வில்வித்தைப் பயிற்சியைத் தொடங்கி, சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பல பெருமைகளைத் தேடித்தந்து வருகிறார்.

தீரஜ் பொம்மதேவரா, வில்வித்தை உலகக் கோப்பை தனிநபர் மற்றும் கலப்பு அணிப் பிரிவுகளில் பல உலகக் கோப்பைத் தொடர்களில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்களில் இந்தியாவின் சார்பில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் தனிநபர் தரவரிச்சுற்றில் (Ranking Round) 681 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தைப் பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தார். கலப்பு அணிப் பிரிவில் (Mixed Team) அங்கிதா பகத்துடன் இணைந்து 4-வது இடத்தைப் பிடித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top