Times of Puducherry

மேடையில் கண் கலங்கி பேசிய த.வெ.க வேட்பாளர்: முதல்வர் விஜய் செய்த செயல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 6:24 PM
dharapuram TVK candidate Sathyabama cry on the stage CM Vijay comfort

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.

முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

கண் கலங்கிய சத்தியபாமா

தொடர்ந்து வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில், “அ.தி.மு.க இயக்கத்தின் தலைமை பிடிக்காமல் வெளியே வந்தேனே தவிர அந்த இயக்கம் பிடிக்காமல் வெளியே வரவில்லை. நாங்கள் துரோகி இல்லை. என் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுவதால் நான் தற்போது மொபைலே பார்ப்பதில்லை. அவ்ளோ அசிங்கமா என்னை பேசுறீங்க. நான் அப்படி என்ன தவறு செய்தேன் அம்மாவினுடைய உண்மையான உணர்வு எனக்குள் இருந்தது.

அ.தி.மு.க-வில் சேர்ந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டேன். அ.தி.மு.க-வுடன் சேர்ந்து செயல்படுவது பிடிக்காமல் தான் வந்தேன். இன்று ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் பதவிக்கு வந்த தூய தலைவர் நமது முதல் அமைச்சர் விஜய். என் மீது தவறு இருந்தால் முதலமைச்சர் மீண்டும் என்னை வேட்பாளராக நிறுத்திருப்பாரா? நானும் உங்களிடம் வந்து துணிச்சலாக ஓட்டு கேட்க முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழி பெண் என்றும் பாராமல் பேசும் ஆபாசமான வார்த்தைகள். என் மீது தவறு இருந்தால் நான் திரும்ப வந்துருக்க மாட்டேன்” எனறு கூறி சத்தியபாமா கண் கலங்கினார்.

ஆறுதல் சொன்ன முதல்வர்

இதைக் கவனித்த முதலமைச்சரும், த.வெ.க தலைவருமான விஜய், சத்தியபாமாவை ஆறுதல் படுத்தினார். மேடையில் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது முதலமைச்சர் விஜய் அவரை அரவணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வு தொடர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top