Times of Puducherry
கடலூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் திறப்பு கடலூர் கலெக்டர் அறிவிப்பு குறை இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் e-DPC மூலம் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 136நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார் இன்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 136நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பயன்பாட்டிலுள்ள e-DPC இணையத்தில் நடப்பு KMS-2026-2027 கொள்முதல் 06.09.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் விளை நிலத்தின் பட்டா நகல் மற்றும் சிட்டா அடங்கல், ஆதார் வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி e-DPC மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.மேற்கண்ட பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம். கொள்முதல் நிலையத்தின் பெயர், கொள்முதல் செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (OTP) மூலம் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணிற்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.சன்ன ரகத்திற்கு ஒன்றிய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2.461.00, தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.289.00 என மொத்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750.00 மற்றும் பொது ரகத்திற்கு ஒன்றிய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2,441.00, தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.159.00 என மொத்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600.00. மேலும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குண்டான கிரயத்தொகை 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் எடையிடவும், தூற்றவும் மற்றும் தைக்கவும் தமிழக அரசு கூலி வழங்குவதால், யாரேனும் பணம் கோரினால் உடனடியாக அதை மாவட்ட நிருவாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் புகார் தெரிவிக்க ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி மற்றும் விழிப்புணர்வு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தொலைபேசி எண்களில் தங்களின் குறைப்பாட்டினை தெரிவிக்கலாம். ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சேர்த்து 40.580 கி.கிராம் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் நேரம் காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை, பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை செயல்படும். விவசாயிகள் நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை மண்டல மேலாளர் 94421 30630, மேலாளர் (தரக்கட்டுபாடு) 80727 28045, துணை மேலாளர் (கொ& இ) 86810 06371, கட்டணமில்லா தொலைபேசி எண் 18005993540 ஆகிய எண்களில் தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.