Times of Puducherry
கடலூர் மாநகராட்சி, இராஜாம்மாள் நகரில் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று (12.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இராஜாம்பாள் நகரில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம் பிரித்து தரப்படவில்லை என்பதை அறிந்து பொதுமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தவும், அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து இன்றைய தினம் தூய்மைக் காவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனிதனியாக பிரித்து தினசரி தங்கள் பகுதிகளுக்கு வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கப்படுவதை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை அலுவலர்கள் தினசரி கண்காணித்து தெருக்களில் குப்பைகள் சேராவண்ணமும், பொதுமக்களுக்கு எவ்வித சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வகையிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், குப்பைகளை பொதுமக்கள் திறந்தவெளியில் கொட்டாமல், தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். குப்பைகளை சாலையோரங்கள், காலி மனைகள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மழைகாலங்களில் குப்பைகளை கழிவுநீர் வாய்கால்களில் குப்பைகளை போடாமல் தடுப்பதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் சுற்றுப்புற சுகாதாரத்தினை பாதுகாக்க முடியும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.