Times of Puducherry
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) . இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி கடைசியாக 2023-ம் ஆண்டு சாம்பியன் ஆனது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து கேப்டன் பொறுப்பேற்ற ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த 2 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கடந்த 2024, 2025 மற்றும் 22026 ஆகிய 3 சீசன்களிலும் ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. கேப்டன் பொறுப்பை ஏற்றது முதல் ருத்துராஜ் ஆட்டத்திலும் மந்தமாக செயல்படுகிறார் என்றும், அணியின் செயல்பாட்டில் தொடர்ந்து நிலைத்தன்மையும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக, சி.எஸ்.கே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை புதிய தொடக்க ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் அணியில் இணைத்தது. இதற்கிடையில், காயம் காரணமாக எம்.எஸ். தோனி ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. தற்போது 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குத் தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சடகோப்பன் ரமேஷ், ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் சி.எஸ்.கே அணியும் கேப்டன்சி குறித்து பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. கேப்டன்சியில் மாற்றம் தேவையா என்றும் அவர்கள் யோசித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் ஒரு சிறப்பான வீரர் என்பதால், அவரை கேப்டனாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அணியின் கேப்டன்சியில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் செய்ய முடிவு செய்தால், சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க அணி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்,” என்று ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சாம்சன் ஐபிஎல் தொடரில் இதுவரை 66 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு, அதில் 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது வெற்றி சதவீதம் 50 ஆக உள்ளது. அவரது தலைமையின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், மற்றொரு முறையும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
View this post on Instagram A post shared by Ramesh Sadagopan (@rameshsadhagopan)
A post shared by Ramesh Sadagopan (@rameshsadhagopan)
நிச்சயமாக, சென்னை அணி மேலும் பல விஷயங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்துவிட்டால் மட்டும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாது. இருப்பினும், கேப்டனை மாற்றுவது என்று முடிவு செய்தால், சஞ்சு சாம்சன் நிச்சயமாக வலுவாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, சஞ்சு சாம்சன் 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து சீசன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர், 477 ரன்கள் குவித்து சென்னை அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். மறுபுறம், ருதுராஜ் கெய்க்வாட் 14 போட்டிகளில் 337 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 28.08 ஆக இருந்தது.
மேலும், பவர்பிளே ஓவர்களில் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களிலும் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஸ்டிரைக் ரேட் மிகக் குறைவாக இருந்தது. அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போன்று ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.