Times of Puducherry

இந்தியா ஏ vs ஆஸ்திரேலியா ஏ: புதுச்சேரியில் தொடங்கிய நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 8:34 AM
cricket-pud

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் புதுவையில் ஆஸ்திரேலியா ஏ அணி, இந்தியா ஏ அணி பங்கேற்று விளையாடும்
நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சி.ஏ.பி. மைதானத்தில் தொடங்கியது.

இங்கு 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டியும், 3 ஒரு நாள் போட்டிகளும் நடக்கிறது. இப்போட்டிகள் அக்டோபர் 11-ந்தேதி வரை
நடக்கிறது. இந்த நிலையில் துத்திபட்டு சி.ஏ.பி. மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது.

இதில் கேப்டன் படிக்கல் தலைமையில் சாய் சுதர்சன் (துணை கேப்டன்), அமன் மோகாதே, யஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷாக்ரா
(விக்கெட் கீப்பர் ) ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷூல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தலைமையில் பிரெண்டன் டோகெட், கேம்ப்பெல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, பெர்கஸ் ஓ நீல், ஜோஷ் பிலிப்பி, கோரி ரோச்சி சியோலி, ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட் ஆகியோரும்
இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் படிக்கல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், அமன் மோகாதே
ஆகியோர் களம் இறங்கினர். அமன் மோகாதே 6 ரன்னில் பெர்கஸ் ஓ நீல் பந்தில் எல்.பி.டபிள்.யூ ஆனார்.

அடுத்து களம் இறங்கிய : கேப்டன் படிக்கல் 3 ரன்னில் டாட் மர்பி பந்தில் ஜேசன் சங்காவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஷேக் ரஷீத் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச்சிசியோலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

பின்னர் யஷ் ரத்தோட் 1 ரன் எடுத்த திருப்தியோடு ஆஸ்திரேலியா அணியில்ரோச்சிசியோலி பந்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்
இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடக்க ஆட்டகாரான சாய் சுதர்சன் அரை சதம் கடந்த நிலையில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ரோச்சி சியோலி பந்தில்
அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 34.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்னில் தவித்தது.
பிறகு குமார் குஷாக்ரா மற்றும் தனுஷ் கோட்டியன் இருவரும் இணைந்து ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

தேநீர் இடைவேளை வரை 2 பேரும் அவுட் ஆகாமல் நிலைத்து நின்று ஆடி 128 பந்துகளில் 54 ரன்கள் குவித்தனர். தனுஷ் கோட்டியன் 57
பந்துகளில் 29 ரன்னும், குமார் குஷாக்ரா 81 பந்துக்கு 27 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 56 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top