Times of Puducherry
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விற்பனை விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளார் இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில்:
அரசு உத்தரவின்படி தற்காலிகபட்டாசு உரிமம் அரசு பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக 18.10.2026 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்களின் விவரம்:மனுதாரரின் மனு, படிவம் AE-5 ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/- க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், முத்திரைத்தாளில் Notary public and Affidavit பெற வேண்டும். மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தற்காலிக வெடிபொருள் உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள் (Blue Print), உரிமக் கட்டணம் ரூ.600/-யை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டு, தற்காலிக வெடிபொருள் உரிமமானது உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்கள் மேற்காணும் அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையத்தில் கொடுத்து பதிவேற்றம் செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.