Times of Puducherry

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மீட்டெடுக்க வேண்டும்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 11:29 AM
cpi(m) shanmugam

முன்னாள் துணை வேந்தர் ஜவஹர் நேசன் தலைமையில் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சிபிஐ(எம்) ஆதரவு தெரிவித்துள்ளார் . இது குறித்து சிபி ஐ [எம்] மாநில செயற்குழு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், சமூக நல ஆர்வமுள்ள குடிமக்கள் ஆகியோர் இணைந்து மேனாள் துணைவேந்தர் வெ. ஜவஹர் நேசன்
தலைமையில் இயங்கும் “குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி ஜனநாயக வாழ்வுரிமைகளுக்கான இயக்கம்” சார்பில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்ப பெற வேண்டும், அனைவருக்கும் சமமான தரமான பொதுக் கல்வி வழங்கிட வேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு 2026 செப்டம்பர் 26ந் தேதிமுதல் அக்டோபர் 16ந்தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலநலனுக்காக பொது நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதோடு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. கல்வி குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்கு பொதுமக்கள் மற்றும் கல்வியின் மீது அக்கறையுள்ள அமைப்புகள் பேராதரவு அளிக்க வேண்டுமென்று சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top