Times of Puducherry
ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை படுகொலை செய்கிற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ப. எம்.பி. தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா சாலை தர்கா, தாராப்பூர் டவர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடையப்பெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் K V தங்கபாலு அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வி.கே. அறிவழகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில், எம்.பி. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தலைவர் விஜய் வசந்த், எம்.பி. அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கராத்தே ஆர். செல்வம், MMDA கோபி, விஜய் சேகர், திலகர், MC மாநில, மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலை பிரதிநிதிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.