Times of Puducherry

"தொடர்ந்து எரியும் மின் கம்பம் அலட்சிய போக்கில் அதிகாரிகள்" தட்டாஞ்சாவடியில் வேட்பாளர் விநாயகம் குற்றச்சாட்டு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 6:59 PM
congress-aligation-thattanchavadi

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்கம்பம் மீது தீப்பொறி போல் எரிந்து கொண்டிருக்கிறது இதை மின்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது.

இதுதான் கேட்பாரற்றுக் இருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதி என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் கோவில் பூங்கா அருகே உள்ள மின்கம்பம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வேட்பாளர் விநாயகம், மின்கம்பம் தொடர்ந்து எரிந்து வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், மின்கம்பத்தை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆட்சியாளர்களும் அரசு துறை அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் நடத்த வேண்டி இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top