Times of Puducherry

குடிசை மாற்று வாரிய மூலம் 24 பைனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரங்கசாமி ரூபாய் 20 லட்சம் வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 6:23 PM
cm-fund release

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு காட்டும் திட்டம் மற்றும் பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா (நகரம்) திட்டத்தின்கீழ் பயன்பெற்ற மங்கலம் சட்டமன்ற தொகுதியை சார்த்த 24 பயனாளிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம்தவணையாக சுமார் 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அனில்குமார், இளநிலை பொறியாளர் பாஸ்கர், கள ஆய்வாளர் மேகநாதன் மற்றும் முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பர்குணன்,
முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து துணை தலைவர் மங்கலம் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top