Times of Puducherry
உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்படி, சட்டமன்றத் தொகுதிகளிலும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில்“சேது சேவா முகாம்கள்” நடத்தப்பட உள்ளன. இது குறித்து குடிமை பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
ரேஷன் அட்டைகள் உள்ளிட்ட குடிமைப் பொருள் வழங்கல் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கானe-KYC சரிபார்ப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்னும் e-KYC நிறைவு செய்யாத சில பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அத்தகைய பயனாளிகள் தங்கள் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முகாம் நடைபெறும் இடத்திற்குச் சென்று, e-KYC சரிபார்ப்பை எளிதாகவும் நேரடியாகவும் மேற்கொள்ளும் வகையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
e-KYC செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான e-KYC செய்தல் . ரேஷன் அட்டையில் ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண்ணை இணைத்தல். முதியோர் மற்றும் நேரில் நியாயவிலைக் கடைக்கு வர இயலாத பயனாளிகள், தங்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர் அல்லது தகுதியான நபர் மூலம் இலவச அரிசி மற்றும் இதர பொருட்களைப் பெற்றுக்கொள்ள நியமன வசதி (Nomination) செய்வதற்கான விண்ணப்ப வசதி, இதர ரேஷன் அட்டை மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்கள். e-KYC இன்னும் நிறைவு செய்யாத அனைத்து பயனாளிகளும் இந்த முழுமையாகப் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு காரணங்களால் நியாயவிலைக் கடைகளுக்கோ அல்லது அரசுஅலுவலகங்களுக்கோ நேரில் வர இயலாத பயனாளிகள், தங்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்காக இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், e-KYC நிலுவையில் உள்ள பயனாளிகளை முகாம்களுக்கு அழைத்து வந்து, இவ்வசதிகளைப் பயன்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “அரசின் சேவைகள் மக்களைத் தேடி – தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபட்டுவிட கூடாது” என்ற நோக்கத்துடன் நடைபெறும் முகாம்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்பதுத்திக்கொள்ளகேட்டுக்கொள்ளப்படுகிறது.
சட்டமன்றத் தொகுதிவாரியாக சேது சேவா முகாம் நடைபெறும் இடங்கள்,
28.09.2026 – திங்கட்கிழமை
பாகூர் – அரசு நடுநிலைப் பள்ளி,பாகூர்
மணவெளி – அரசு உயர்நிலைப் பள்ளி,தவளக்குப்பம், புதுச்சேரி-605007
மங்கலம் – அரசு உயர்நிலைப் பள்ளி, மங்கலம்
லாஸ்பேட்டை – நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி,லாஸ்பேட்டை, புதுச்சேரி
முத்தியால்பேட்டை – Vasavi International School (CBSE),முத்தியால்பேட்டை
உருளையன்பேட்டை- திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
இந்திரா நகர் – இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி,முத்திரையர்பாளையம், புதுச்சேரி – 605009
29.09.2026 – செவ்வாய்க்கிழமை
ஏம்பலம் – மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி,ஏம்பலம்
அரியாங்குப்பம் – அரசு தொடக்கப் பள்ளி, காக்காயந்தோப்பு, மண்டலம்-3,புதுச்சேரி
வில்லியனூர் – அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, வில்லியனூர்
காமராஜ் நகர் – S.R. சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளி, சாரம்,புதுச்சேரி
ராஜ்பவன் – VOC அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜ்பவன்
கதிர்காமம் – அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கதிர்காமம்,புதுச்சேரி – 605009
மண்ணாடிப்பட்டு – அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்கனூர்
காலாப்பட்டு – M.O.H. Farook Maraicar அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காலாப்பேட்டை, புதுச்சேரி
30.09.2026 – புதன்கிழமை
நெட்டப்பாக்கம் – கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, நெட்டப்பாக்கம்
உப்பளம் – Immaculate Heart of Mary Girls Hr. Sec. School,உப்பளம்
ஊசுடு – Deepa Oli அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி,தொண்டமானத்தம், புதுச்சேரி
முதலியார்பேட்டை – Seventh Day Adventist Higher Secondary School,முதலியார்பேட்டை, புதுச்சேரி
உழவர்கரை – V. சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளி, சிவகாமி நகர்,மேரி உழவர்கரை
திருபுவனை – கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி,கலித்தீர்த்தாள்குப்பம், புதுச்சேரி – 605107
நெல்லித்தோப்பு – மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,குயவர்பாளையம்
எந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பயனாளியாக இருந்தாலும்,தங்களுக்கு வசதியான எந்த ஒரு முகாம் நடைபெறும் இடத்திற்கும் சென்று, தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.