Times of Puducherry

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 5:40 PM
childrape- judgement-hang to life sentence

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி காக்கா என்ற கருணாஸின் குற்றத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கருணாஸின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. அதே நேரத்தில், குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளி தொடர்பான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

மேலும், வழக்கில் புதுச்சேரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையை நீதிபதிகள் பாராட்டினர். வழக்கை விரைவாகவும், முழுமையாகவும், கவனமாகவும் விசாரித்ததற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி ஆஜராகினர். குற்றவாளி தரப்பில் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோவன் மற்றும் அவரது குழுவினர், வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top