Times of Puducherry
குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தையும், உரிய சிகிச்சையின் அவசியத்தையும் வலியுறுத்துதல் மற்றும் “குழந்தைப் பருவ புற்றுநோயை குணப்படுத்த முடியும்” என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சி, 2030ஆம் ஆண்டிற்குள் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தை 60% ஆக உயர்த்துவதையும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நோயால் ஏற்படும் துயரங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) குழந்தைப் பருவ புற்றுநோய்க்கான உலகளாவிய முன்னெடுப்புடன் இணைந்ததாகும்.
மருத்துவப் பணியாளர்கள், குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகளின் (NGOs) பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களுக்காக ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த தங்களது புரிதலையும், அவர்களுக்கான ஆதரவையும் மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. புதுச்சேரியில் உள்ளபல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
காந்தி திடல் வரை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள்,குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்டவரின் உரை மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்புரையை மருத்துவ புற்றுநோயியல் துறை பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் கணேசன் வழங்கினார். அவர், குழந்தைகளுக்கு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் போது கௌரவிக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், குழந்தைப் பருவப் புற்றுநோய் குறித்த மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
மருத்துவ புற்றுநோயியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சுவாமிநாதன் கே. குழந்தைப் பருவ புற்றுநோய், அதிக குணமடையும் விகிதம், ஜிப்மரில் வழங்கப்படும் இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகள், மேலும் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்குத் தேவையான இரத்தம் செலுத்தும் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஒட்டுமொத்தமாக, இந்நிகழ்ச்சி குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல், புற்றுநோய் குறித்த தவறான சமூகப் பார்வைகளைக் குறைத்தல் மற்றும் முழுமையான ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. சிகிச்சை பெறும் காலத்திலும், சிகிச்சைக்குப் பிறகும் குழந்தைகளின் உணர்வுநலன், கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், உரிய சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதில் குடும்பங்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்களிப்பும் வலியுறுத்தப்பட்டது.
குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும், ஒவ்வொரு குழந்தையும் வளரவும், கற்கவும், அன்றாட வாழ்க்கையில் பங்கேற்கவும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது. இந்நிகழ்ச்சிக்கு CANKIDS, Doctors For You, Rotary Club of Pondicherry Beach Town, Rotary Club of Pondicherry Eves, Rotary Club of Pondicherry Midtown, Joy & Light (JAL) Foundation, Pondicherry Yellow Ribbon Association (PYRA), Jubilant School of Music, Puvi Foundation Trust, Pfizer உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆதரவு வழங்கினர்.
உலகளவில் பதிவாகும் குழந்தைப் பருவ புற்றுநோய்களில் சுமார் 20% இந்தியாவில் ஏற்படுகின்றன. அவற்றில் இரத்தப் புற்றுநோய் (Leukemia), நிணநீர்க்குழாய் புற்றுநோய் (Lymphoma) மற்றும் மத்திய நரம்பு மண்டலக் கட்டிகள் (CNS Tumors) ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. ஜிப்மரில் 2010ஆம் ஆண்டு முதல் குழந்தைப் பருவ புற்றுநோய்க்கான பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 250 புதிய குழந்தைப்பருவ புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின்றன. சிகிச்சை கைவிடப்படுவதைக் குறைப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவச் சமூகப் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். ஆலோசனை, நிதி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஆதரவுகள், தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி, ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் துறை பேராசிரியர் டாக்டர் ஸ்மிதா கயல்நன்றி கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.