Times of Puducherry
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற திங்கள்கிழமை (செப்.11) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையின் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடைவித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், விநாயகர் சிலைகளை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசு விளக்கம் தர ஆணையிட்டுள்ளது.
சென்னையின் பட்டினப்பாக்கம், நீலாங்கரையின் சுற்றுச்சூழல் முக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வேறு பகுதிக்கு மாற்றுவதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத வேண்டியுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.