Times of Puducherry

Chanakya Niti: இந்த 4 இடங்களில் வசிக்காதீர்கள்.! அது உங்கள் முன்னேற்றத்திற்கும் மரியாதைக்கும் தடையாக இருக்கும்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
24 Sep 2026 • 3:11 PM
chanakya niti 4 places where people should not live or never stay

Chanakya Niti: இந்தியாவின் தலைசிறந்த அறிஞராக விளங்கிய ஆச்சார்ய சாணக்கியர் மனிதர்கள் வசிக்க கூடாத நான்கு இடங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Chanakya Niti

இந்தியாவின் தலைசிறந்த அறிஞராக திகழ்ந்தவர் ஆச்சார்ய சாணக்கியர். இவர் சமூகத்தை மேம்படுத்தவும், தனி நபர்களை சரியான திசையில் வழிநடத்தவும் தனது கொள்கையில் பல முக்கியமான கோட்பாடுகளை வகுத்துள்ளார். அவர் வகுத்த கோட்பாடுகள் இன்றளவும் பலருக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றன. 

அந்த வகையில் சில இடங்களில் வாழ்வது என்பது தனி நபரின் முன்னேற்றம், வெற்றி, கௌரவம் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு நபர் வாழ்வதை தவிர்க்க வேண்டிய இடங்களைப் பற்றி இந்த பதிவில் ஆராய்வோம். 

சாணக்கியர் தனது நீதி சாஸ்திர நூலின் முதல் அத்தியாயத்தின் எட்டாவது செய்யுளில், “மரியாதை இல்லாத, வாழ்வாதாரம் இல்லாத, சகோதரத்துவம் இல்லாத மற்றும் கல்வி சாத்தியமில்லாத ஒரு நாட்டில் வாழக்கூடாது” என்று கூறியுள்ளார்.

மதிக்கப்படாத இடம்

“நீங்கள் மதிக்கப்படாத இடத்தில் ஒருபோதும் வாழக்கூடாது. உங்களின் கடின உழைப்பு, திறமைகள், ஆளுமைகள் மதிக்கப்படாத இடத்தில் நீண்ட காலம் தங்கக்கூடாது. இத்தகைய இடத்தில் வாழ்வது உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், வளர்ச்சிக்கு தடையாக அமையும். மேலும் அவமானங்களையும் சந்திக்க நேரிடும். கடின உழைப்பு இருந்த போதிலும் மற்றவர்களுடன் ஒப்பிடப்படுவீர்கள். எனவே ஒருவர் தனது குணங்கள் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் மதிக்கப்பட்டு, கௌரவிக்கப்படும் இடத்தில் வாழ வேண்டும்” என்று சாணக்கியர் கூறுகிறார்.

வாழ்வாதாரம் இல்லாத இடம்

“ஒருவர் தனது தகுதிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பையோ அல்லது பொருத்தமான வருமான ஆதாரத்தையோ கண்டுபிடிக்காத இடத்தில் வாழக்கூடாது. வாழ்வாதாரம் என்பதே வெறும் பணம் மட்டுமல்ல. சுயசார்பும், சுயமரியாதையும் அவசியமானவை. எனவே ஒருவர் தனது திறன்களுக்கும், ஆற்றல்களுக்கும் பொருத்தமான வேலையை கண்டுபிடிக்க கூடிய ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சகோதரத்துவம் இல்லாத இடம்

கடினமான சூழ்நிலைகளிலும், துன்பங்களிலும் உங்களுக்கு ஆதரவு அளிக்க யாரும் இல்லாத இடத்தில் வாழ்வதை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட இடத்தில் வாழ்வது உங்களை தனிமையாக உணர வைக்கும். சமூக மற்றும் உணவுப்பூர்வமான ஆதரவை பெறக்கூடிய ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வாழவேண்டும். இதன் மூலம் எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் எளிதாக கடக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

கல்விக்கான வாய்ப்பு இல்லாத இடம்

அறிவு ஒரு மனிதனின் அடித்தளமாகும். எனவே நாம் வாழும் இடம் கல்விக்கும் கற்றலுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அத்தகைய இடத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் ஆளுமையை மேம்படுத்துவதோடு, உங்கள் வெற்றி வாய்ப்புகளையும் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் வேகமாக வளரும். கல்விக்கும், அறிவிக்கும் வாய்ப்புகள் இல்லாத இடத்தில் நீங்கள் வாழ்ந்தால் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

(குறிப்பு: இந்தக் கட்டுரை ஆச்சாரிய சாணக்கியரால் எழுதப்பட்ட சாணக்கிய நீதியின் கருத்துக்கள் மற்றும் பொதுவான விளக்கங்களை பற்றியது. இந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபர், இடம் அல்லது சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை அல்லது தீர்ப்பையோ தூண்டும் நோக்கம் கொண்டவை அல்ல. எனவே வாசகர்கள் இதை தங்கள் சொந்த விருப்பத்திற்கும் தற்போதைய சூழலுக்கும் எப்ப புரிந்து கொள்ள வேண்டும். இந்த தகவல்கள் பொதுவான மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top