Times of Puducherry

புதுச்சேரி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 9:51 PM

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுமன் பில்லா அவர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரி

சுற்றுலா திட்டங்கள் தொடர்பான கருத்துருவும், அதுதொடர்பான முதலமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதங்களையும் கூடுதல் செயலரிடம் வழங்கினார்.

புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு தொடர்புடைய சுமார் ரூ.1,300 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கைகள் கடந்த முறை டெல்லி சென்றபோது மத்திய அரசிடம் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்தார். இதில் முதல் கட்ட முன்னுரிமையாக, புதுச்சேரி கடற்கரை மேம்பாடு, சட்டமன்றத்திற்கு எதிரே உள்ள பாரதி பூங்கா மேம்பாடு, பழைய துறைமுகத்தில் இருந்து கலங்கரை விலக்கு வரை உள்ள சாலையை மேம்படுத்தல் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிகளுக்கான கட்டுமாணங்கள் ஆகிய பணிகளுக்கு சுமார் ரூ.100.93 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனஅமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஏனாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஏனாம் கோதாவரி புஷ்கர் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே உள்ள 5-படித்துறைகளுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மேலும் 14-படித்துறைகள் அமைக்கவும், அவற்றை இணைக்கும் வகையில் சாலைகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்கவும் ஏற்கனவே ரூ.48 கோடி முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அதற்கு மாற்றாக 12 நாட்கள் நடைபெற உள்ள புஷ்கர் விழாவின்போது தினசரி தூய்மைப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் மேற்கொள்வதற்காக சுமார் ரூ.59 கோடி மதிப்பில் புதிய திட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள் வரும் 18-ஆம் தேதி மத்திய நீர் வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தில் உள்ள Destination Development Division இயக்குநர் சீமா ஜெயின் அவர்களை பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சந்தித்து பேசினார் . மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் National River Conservation Directorate இயக்குநர் டாக்டர் சபிதா மாதவி சிங் அவர்களையும் அமைச்சர் சந்தித்து பேசினார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top