Times of Puducherry
செப்டம்பர் மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3 நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை (Pension) செப்டம்பர் 25 அன்றே முன்னதாகவே வழங்கிட மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
3 நாள் வங்கி வேலைநிறுத்தம்:
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அமைப்புகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கி, மாத இறுதியான செப்டம்பர் 30 அன்று சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்குவதில் தாமதம் ஏற்படம் என்ற சூழல் உருவானது.
மத்திய அரசு நிதியமைச்சகம் அதிரடி நடவடிக்கை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மாத இறுதியில் பணம் பெறுவதில் சிரமப்படக் கூடாது என்பதற்காக, கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் (CGA) மற்றும் நிதியமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த முன்வரவு நடவடிக்கையை எடுத்துள்ளன.
முன்கூட்டியே வரவு: வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம், இந்த முறை செப்டம்பர் 25 அன்றே அனைவரின் வங்கிக் கணக்கிலும் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை: இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும், பொதுத்துறை வங்கிகளுக்கும் மற்றும் கருவூலங்களுக்கும் அனுப்பப்பட்டு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.