Times of Puducherry

'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்'... புதிய படிப்பு விதிகளால் யாருக்கு லாபம்? கனடா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 5:51 PM
Canada new temporary study policy foreign workers

கனடாவில் வேலை வாய்ப்பு உரிமம் (Work Permit) வைத்திருப்பவர்கள், இனி தனியாக எந்தவித கல்வி அனுமதிச் சீட்டும் (Study Permit) பெறாமல் குறுகிய காலப் படிப்புகளைப் படிக்க அனுமதிக்கும் புதிய விதிகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய விதியின் முக்கிய அம்சங்கள்:

கனடா குடிவரவு மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) புதிய அறிவிப்பின்படி, கனடாவில் ஏற்கனவே பணிபுரிய அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டினர் பின்வரும் சலுகைகளைப் பெற முடியும்.

6 மாத படிப்புகளுக்கு அனுமதி இல்லாத கல்வி விசா: பணி உரிமம் (Work Permit) வைத்துள்ளவர்கள், 6 மாதங்கள் அல்லது அதற்கு குறைவான கால அளவு கொண்ட பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் (Short-term courses) படிக்க தனியாக ‘ஸ்டடி பெர்மிட்’ எடுக்க வேண்டியதில்லை.

தொழில்முறைத் திறன் மேம்பாடு: இதன் மூலம் பணிபுரிந்துகொண்டே தங்கள் தொழில் சார்ந்த புதிய திறன்களை (Skill Upgradation) வளர்த்துக் கொள்ள அல்லது புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.

யாருக்குப் பயன்?

கனடாவில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. தொழில் சார்ந்த கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம், அங்குள்ள வேலைவாய்ப்பு சந்தையில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளவும், எதிர்காலத்தில் நிரந்தர குடியுரிமை (PR) பெறவும் இந்த மாற்றம் மிகவும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அதேவேளையில், 6 மாதங்களுக்கும் அதிகமான கால அளவு கொண்ட நீண்டகால பட்டப்படிப்புகள் (Degree/Diploma courses) படிக்க விரும்புபவர்கள் வழக்கம் போலத் தனி கல்வி அனுமதிச் சீட்டைப் (Study Permit) பெற வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top