Times of Puducherry

இதயா கல்லூரி தாளாளரை சந்தித்து ஆசி பெற்ற அசோக் ஆனந்தன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Sep 2026 • 5:13 PM
campaign- idaiya college

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பாக்கமுடையான்பேட் பகுதியில் அமைந்துள்ள இதயா கல்லூரியின் தாளாளர் முனைவர் அருட்சகோதரி பாத்திமா அவர்களை, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது அருட்சகோதரி பாத்திமாவிடம் ஆசி பெற்ற அசோக் ஆனந்த், கிறிஸ்தவ சமுதாயத்தினர் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவேன் என தெரிவித்தார். மேலும், தொகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் முன்வைக்கும் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top