Times of Puducherry

பிக்பாஸில் இருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்.! இறுதி நிமிடத்தில் பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:32 PM
Biggboss season 10 Javeed Elimination update

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Biggboss 10 Javeed Elimination

சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் இருந்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கடந்த வாரம் ஆனந்தி வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நிலையில், 20 பேருடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில சீசன்கள் ரசிகர்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் இந்த சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சூடுபிடித்துள்ளது.

கதை சொல்லும் டாஸ்க்

அந்த வகையில் இந்த வாரம் கதை சொல்லும் டாஸ் வைக்கப்பட்டுள்ளது. நான்கு போட்டியாளர்களுக்கு 20 நிமிடம் வழங்கப்பட்டு, அதற்குள் சுவாரசியமாக அவர்களின் வாழ்க்கைக் கதையை சொல்ல வேண்டும் என கூறப்படுகிறது. சுவாரஸ்யம் குறைவாக கதை செல்லும் போட்டியாளர்கள் மூன்று பேர் கேப்டனால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த வார கேப்டன் முகேஷ் ஷமா, அஸ்மிதா மற்றும் ஜாவித் ஆகிய மூவரையும் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்களாக தேர்வு செய்தார்.

சுவாரஸ்யம் குறைவாக கதை சொன்ன ஜாவித்

இந்த மூன்று பேரில் யாருக்கு அதிக வாக்குகள் விழுகிறதோ அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். மற்ற போட்டியாளர்கள் இவர்கள் மூவருக்கும் வாக்களித்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஜாவித் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். வீட்டில் நடந்த பிற போட்டியாளர்களின் உத்திகளுக்கு ஈடு கொடுத்து தனக்கென தனித்துவமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை என்கிற விமர்சனம் பரவலாக இருந்தது. ஆரம்ப நாட்களிலேயே வீட்டில் ஒரு சிலருடன் லவ் ட்ராக் உருவாக்க முயன்றது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் ஆதங்கம்

வீட்டிற்குள் இன்னும் விளையாடாத, சுவாரஸ்யம் இல்லாத பல போட்டியாளர்கள் இருக்கும்பொழுது ஜாவித்தை வெளியேற்றியதை நியாயமற்றது என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிகழ்ச்சியில் பெரிய அளவில் எந்த விதமான சுவாரஸ்யம் அல்லது சிறப்பான பங்களிப்பையோ அவர் வெளிப்படுத்தவில்லை என்பதால் இந்த எவிக்ஷன் முடிவே சரியானது என்று கூறி வருகின்றனர்.

இது நியாயமான வெளியேற்றமா? 

முன்பு எப்போதும் இல்லாத வகையில் கதை சொல்லும் டாஸ்கை அடிப்படையாக வைத்து சக போட்டியாளர்களைக் கொண்டு எலிமினேஷன் செய்ய வைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும், மக்களின் முடிவுக்கு மதிப்பு தராமல் பிக்பாஸ் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் ரசிகர்கள் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர். பிக்பாஸ் தொடங்கி 12 நாட்களே ஆன நிலையில் இந்த எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top