Times of Puducherry

கடற்கரை சாலையை அழகுபடுத்தும் திட்டம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஆய்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 11:39 PM
beach road-restructure-mulladi

சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், இஆப., பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, இஆப., பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், சுற்றுலாத்துறை இயக்குநர் முரளி, இன்டாக் அதிகாரி அருண் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடற்கரை சாலையை அழகுபடுத்தும் திட்டம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஆய்வு

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் கடற்கரை பகுதியை அழகுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள மின் விளக்குகளை மாற்றி அமைத்தல், லோக் நிவாஸ் முதல் டுப்ளக்ஸ் சிலை வரையிலான நடைபாதைகளை சீரமைத்து அழகுபடுத்துதல், அலங்கார வளைவுகள் அமைத்தல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடங்களை ஏற்படுத்துதல், தரை விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், காந்தி சிலை மற்றும் காந்தி திடலை மேம்படுத்தி அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top