Times of Puducherry

அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே சிறுவன் உயிரிழக்க காரணம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 12:21 PM
beach-ilaiyaraya-child-death

துருப்பிடித்த மின்கம்பம் சாய்ந்து 6 வயது சிறுவன் பரிதாப பலி. மேலும், இது போன்ற தவறான நிகழ்வுகள் மாநிலத்தில் மீண்டும் ஏற்படாத வண்ணம் இந்த அரசு மழைக் காலத்திற்கு முன்பே மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டுமென்று என காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் இளையராஜா வலியுறுத்தி உள்ளார் இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசின் அலட்சியப் போக்கு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் துருப்பிடித்த மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையினை இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர்.
ஆட்சியாளர்களுக்கு மட்டும் சேவை செய்தால் போதும் என்று அரசு அதிகாரிகள் நினைக்கின்றார்கள். ஓட்டு போட்ட மக்களைப் பற்றி ஆட்சியாளர்கள் எப்படி கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்களோ அது போல தான் அதிகாரிகளும் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திப்பதே கிடையாது. இப்போது இந்த அரசின் முழு கவனமும் இடைத்தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்று அந்த வேலையை மட்டும் நினைத்து சிந்தித்து வருகிறார்கள். மாநிலத்தில் எங்கு என்ன நடந்தால் நமக்கு என்ன என்று மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதே கிடையாது.

இந்த அரசாங்கத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு துருப்பிடித்துப் போன அரசாங்கம் என்று தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கையால் ஆகாத அரசு என்று தான் சொல்ல வேண்டும். துருப்பிடித்துப் போன இரும்பு போல இந்த ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமை அனைத்து துறையிலும் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது.

மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற நிலையினை அரசு ஏற்படுத்தி விட்டது. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு பணி படுமோசமாக உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. முதல்வர் அவர்கள் மக்கள் படும் பிரச்சனைகள் துன்பங்கள் பற்றி ஆய்வு செய்ய என்றைக்காவது ஒரு நாள் களத்திற்கு சென்றிருப்பாரா ?
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே சிறுவன் உயிர் இறக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது .

சிறுவன் உயிர் இழப்புக்கு காரணமான இந்த அரசு உடனடியாக சிறுவனின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் மேலும் சிறுவனின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது போன்ற தவறான நிகழ்வுகள் மாநிலத்தில் மீண்டும் ஏற்படாத வண்ணம் இந்த அரசு மழைக் காலத்திற்கு முன்பே மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top