Times of Puducherry
புதுச்சேரி கடற்கரையில் பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்தத்தில் படுகாயமடைந்த 5 வயது குழந்தை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பெரியக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் தஸ்லீன். இவரது மனைவி ரிஹானா. இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் தங்கி மக்கள் கூடும் இடங்களில் தலையில் வைக்கப்படும் அலங்கார விளக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
விடுமுறை தினமான ஞாயிறு மாலை கூட்டம் அதிகமாக இருப்பதால் ரிஹானா, மகன் பைசலுடன் கடற்கரைச்சாலையில் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது மின்விளக்கு கம்பம் அருகே வைக்கப்பட்டிருந்த பையில் உள்ள தண்ணீர் எடுக்க சென்ற போது துருபிடித்திருந்த மின்விளக்கு கம்பம் சரிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து பலத்த காயமடைந்த சிறுவனை , அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்ததை அடுத்து பெரியக்கடை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.