Times of Puducherry

தேசிய சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் தேக்வோண்டோ போட்டியில் புதுச்சேரி வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 2:30 PM
basker-sports-indore-teakwonda

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் தேக்வோண்டோ போட்டி அக்டோபர் 02ஆம் தேதி முதல் அக்டோபர் 04ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள புதுச்சேரி பாரத் தேக்வோண்டோ சங்கம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு ஒருமாத சிறப்பு பயிற்சி சங்க தொழில்நுட்பக்கூழு வழங்கியது. இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகள் வழியனுப்பு விழா மாஸ்டர் வினோத் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சங்க கெளரவ தலைவர் நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணை தலைவருமான பாஸ்கர் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் செல்வம், காமேஷ்வரன், அஸ்வினி, நித்திஷ்குமார், வசந்த், தமிழரசன், தாக்ஷாயினி, திவாகர் மற்றும் நிர்வாகிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பயிற்சியாளர் மனிஷ் செய்திருந்தார்.

தேசிய சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் தேக்வோண்டோ போட்டியில் புதுச்சேரி வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top