Times of Puducherry

செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேசமயமாக்கப்பட்ட வங்கிகள் வேலைநிறுத்தம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 12:05 PM
bank strike

வங்கி ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்தம்: செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கி சேவைகள் பாதிப்பு 27 (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (United Forum of Bank Unions) சார்பில், 2026 செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேசமயமாக்கப்பட்ட வங்கிகளின் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு வங்கி சேவைகளில் இடையூறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியாத வங்கி பரிவர்த்தனைகளை 2026 செப்டம்பர் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், இணைய வங்கி, மொபைல் வங்கி, யூபிஐ, ஏடிஎம் மற்றும் பிற டிஜிட்டல் வங்கி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்கும், அன்றாட நிதி தேவைகள் பாதிக்கப்படாத வகையில் முன் ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறும் வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top