Times of Puducherry
ஜப்பானில் நடைபெற்று வரும ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி கபடி போட்டியில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்டுகள் மற்றும் பெண்கள் பிரிவில் களமிஙறங்கிய இந்திய கபடி அணிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஆண்கள் அணியில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்றில், சீனா, ஜப்பான், தென்கொரியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இந்தியா – சீனா அணிகளும், பி பிரிவில் ஈரான் தாய்லாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தாய்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 66-28 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. மறுபுறம், சீனா அணியை வீழ்த்திய ஈரான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானுடன் மோதியது, இதில் 40-34 என்ற புள்ளி அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
1990-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி 9-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 2018-ம் ஆண்டு மட்டும் இந்திய அணி இந்திய அணி 4-வது இடத்தை பிடித்தது.
பெண்கள் பிரிவில், ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்றில், ஈரான், பங்களாதேஷ், ஜப்பான் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், பி பிரிவில் 2-வது இடம் பிடித்த நேபாள் அணியுடன் அரையிறுதியில் மோதியது. இதில் 48-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் சீனாவை அரையிறுதியில் வீழ்த்திய ஈரான இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியா ஈரான் அணிகள் மோதியது. இதில் 37-34 என்ற புள்ளி அடிப்படையில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2018-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்த இந்திய மகளிர் அணி மற்ற 4 தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.