Times of Puducherry

அப்பா ரீ-ரிலீஸ், மகன் நேரடி ரிலீஸ்: ஒரே நாளில் மோதும் விஜய் - ஜேசன் சஞ்சய் திரைப்படங்கள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 3:53 PM

தமிழ்நாடு முதல்வர் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படமான சிக்மா அக்டோபர் 1-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் 21 ஆண்டுகள் கழித்து விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘திருப்பாச்சி’. விஜய் த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில், பசுபதி, கோட்டா ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதே நேரத்தில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. சுவாரஸ்யமாக, இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. ‘திருப்பாச்சி’ திரைப்படம் 2026 அக்டோபர் 1ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் சினிமாவை விட்டு அரசியலில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனால் தந்தை–மகன் இருவரின் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

2005ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் அண்ணன் – தங்கை பாசத்தை எடுத்து சொல்லும் ஒரு படமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு விஜய்யின் சகோதரி சென்னைக்கு செல்கிறார். அங்கு அவரது வாழ்க்கையும், அவரது கணவரின் வாழ்க்கையும் உள்ளூர் ரவுடிகளால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றன. இதையடுத்து, தனது சகோதரியின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஜய்யின் கதாபாத்திரம் களத்தில் இறங்குகிறது.

2005ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானபோது, ‘திருப்பாச்சி’ திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.32 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.

அதேபோல் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நடிகர் விஜய்யின் மகன் என்ற பின்னணி இருந்தாலும், நடிகராக அறிமுகமாகாமல் திரைப்பட இயக்குநராக திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்க ஜேசன் சஞ்சய் முடிவு செய்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

படத்தின் பெரும்பாலான கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும், ‘சிக்மா’ திரைப்படம் ‘தனித்து செயல்படும் ஓநாய்’ போன்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். புதையல் தேடல், கொள்ளை மற்றும் நகைச்சுவை ஆகிய அம்சங்களை ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் வெற்றிப் படமான ‘திருப்பாச்சி’ மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. மறுபுறம், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ வெளியாகிறது. இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருப்பதால், அக்டோபர் மாத தொடக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் இந்த தந்தை–மகன் திரைப்படங்களின் மீது திரும்பியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top