Times of Puducherry

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 10:49 AM

தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம். ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூ.300-ஆக நிர்ணயம்-மத்திய அரசு அறிவிப்பு.

அக்.15 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட UPI வணிக பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறை அமலாகிறது என நிதியமைச்சகம் அறிவிப்பு.

ரூ.2,000 வரை செலுத்தினால் என்ன விதி, நீங்கள் கடைகளில் செய்யும் UPI பரிவர்த்தனைகள் ரூ.500, ரூ.1,500 அல்லது சரியாக ரூ.2,000 வரை எதுவாக இருந்தாலும் எந்தவித கட்டணமும் கிடையாது. தனிநபர்கள் செய்யும் சாதாரண UPI பரிவர்த்தனைகளுக்கு எத்தகைய கட்டணமும் இல்லை. இந்த வகை சிறிய பரிவர்த்தனைகள் தான் UPI-ல் 95%க்கும் அதிகம் என்பதால் பெரும்பான்மையான சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் இதனால் எந்தவித கூடுதல் கட்டணச் சுமையின்றி தொடர்ந்து இலவசமாகவே UPI சேவையைப் பயன்படுத்தலாம்.

சில குறிப்பிட்ட வணிகப் பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்தச் கட்டணத்தை வாடிக்கையானர்கள் எவரும் தங்களது சொந்தப் பணத்திலிருந்து கூடுதலாகச் செலுத்த வேண்டியதில்லை. இது முழுக்க முழுக்க வணிகர்களைச் சார்ந்தது. யு பி ஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் நடைமுறை அடுத்த மாதம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top