Times of Puducherry
தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்காக புதுச்சேரிக்கு வருகை தந்த நடிகர் கே.பி.ஒய்.பாலா செய்தியாளர்களை சந்தித்தபோது, தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்..
தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.