Times of Puducherry

டாக்டர் M.S. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 12:28 PM
(AIKS)

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) 15-வது புதுச்சேரி மாநில மாநாடு !
காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீர் பங்கீட்டை உடனே பெற்றுத் தர வேண்டும்!

புதுச்சேரி பாகூரில் த. முத்துலிங்கம் நினைவரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) 15-வது புதுச்சேரி மாநில மாநாடு பிரம்மாண்ட பேரணியுடனும் துவங்கியது. தொழிற்சங்கத் தலைவர் முருகன் பேரணியை கொடியேற்றி துவக்கி வைத்தார்.
டாக்டர் M.S. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும். விதை மசோதா & மின்சார திருத்தச் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற வேண்டும்! இலவச மின்சாரம் தொடர வேண்டும்! காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீர் பங்கீட்டை உடனே பெற்றுத் தர வேண்டும்! பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ₹60 கொள்முதல் விலை வழங்க வேண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து, கரும்பு பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும்! உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெ. கலியபெருமாள் விவசாய சங்க ஸ்தாபன தலைவர், விஜூ கிருஷ்ணன் அகில இந்திய பொதுச் செயலாளர், டி. ரவீந்திரன் அகில இந்திய துணைத் தலைவர், வல்சன் பனோலி (அகில இந்திய துணைச் செயலாளர்), க. சீனுவாசன் (CITU மாநிலச் செயலாளர்),த. தமிழ்ச்செல்வன் (AIAWU மாநிலச் செயலாளர்), மாநில தலைவராக ஆர். ராஜாங்கம் மாநில செயலாளர், இரகு. அன்புமணி மாநில பொருளாளர், ச. ராமமூர்த்தி, சி.டி. விஜீஷ் (மாஹே பகுதி செயலாளர்) புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top