Times of Puducherry
தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார்!இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
புதுச்சேரி, முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம், அனிதா நகர், சோழன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக பல வீடுகளுக்குள் பெரிய பாம்புகள், குட்டி பாம்புகள் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அவ்வப்போது பாம்பு பிடிக்கும் வனத்துறை ஊழியர்கள் அழைத்தவுடன் வந்து பாம்புகளை பிடித்து மக்களை நிம்மதியடையச் செய்துள்ளனர்.புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியில் உள்ள ரோடியர்மில் பழைய பஞ்சாலை வளாகத்திற்குள் காடுகளைப்போல் அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்கள், புதர்களை யாரும் பராமரிக்காததால் அப்பகுதி கொடிய வனவிலங்குகள் வாழும் பகுதியாகியிருப்பதாகவும் அங்கிருந்து கொடிய விஷம் கொண்ட நல்லபாம்புகள் உள்ளிட்ட பல வகை பாம்புகள் அருகாமையில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் கருதப்படுகிறது.
அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி முறையாக பராமரிக்கவும், அப்பகுதியில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்பேட்டை அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். பாம்புகளால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தொழில்நுட்ப கல்வி பயின்ற புதுச்சேரி இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில் தொழில்நுட்ப பூங்கா, ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளி பூங்கா பதப்படுத்தப்பட்ட கடலுணவு, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யக்கூடிய மத்திய அரசு உணவு, பதப்படுத்துதல் அமைச்சகத்தின உதவியுடனான உணவுப்பூங்கா வளாகம் ஆகியவற்றை ரோடியார்மில் வளாகத்தில் உருவாக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.