Times of Puducherry
தான் நடித்த ஒரு திரைப்படத்தின் அந்தரங்கக் காட்சி அடங்கிய வீடியோ கசிந்ததைத் தொடர்ந்து தான் எதிர்கொண்ட மன உளைச்சல் குறித்து நடிகை ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.
‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ள ராதிகா, அந்தரங்கக் காட்சிகளில் நடிக்கும்போது நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிப் பேசியிருந்தார். இதில் கேமராக்களுக்கு முன்னால் படப்பிடிப்பு முடிந்தாலும் இதுபோன்ற காட்சிகளைக் குறித்த அச்சம் முடிவுக்கு வருவதில்லை, அக்காட்சிகள் மிக விரைவாக நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாக மாறும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
அந்தரங்கக் காட்சிகளில் நடிப்பதைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் நான் நடித்த ஒரு காட்சி கசிந்தபோது, நான்கு நாட்களாக என்னால் வீட்டை விட்டு வெளியே வரக் கூட முடியவில்லை. இதுபோன்ற விஷயங்கள் மிக விரைவாக நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும். யாருக்காவது அது விரும்பத்தகாததாகத் தோன்றினால், அவர்கள் உங்கள் வீட்டின் முன் வந்து காலிங் பெல்லை அடிக்கலாம். எனவே இது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல; சூழ்நிலை மிகவும் சிக்கலாகலாம்,” என ராதிகா கூறினார்.
தனது ஸ்டைலிஸ்ட்டின் டிரைவர் அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்ததுடன், அதுகுறித்து ஸ்டைலிஸ்ட்டிடம் பேசிய சம்பவத்தையும் குறித்து பேசிய ராதிகா ஆப்தே, தனது வாட்ச்மேனும் அந்த வீடியோவைப் பார்த்திருந்ததாக அவர் கூறினார். “எனது ஸ்டைலிஸ்ட்டின் டிரைவர் அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு, ‘நீங்கள் அவருடைய வீட்டிற்குத்தான் செல்கிறீர்களா?’ என்று அவளிடம் கேட்டதாக அவர் என்னிடம் சொன்னார். எனது வாட்ச்மேனும் அதைப் பார்த்திருந்தான்.
இதுபோன்ற விஷயங்கள் நடக்கத் தொடங்கியபோது, அதைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது,” என்று கூறினார்.பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டதால், தனது டீமில் உள்ளவர்களிடம் சூழ்நிலையை வெளிப்படையாகக் கூறியதாகவும் தெளிவுபடுத்திய ராதிகா, தான் எதிர்கொள்ளும் நிலைமையை அவர்கள் புரிந்துகொள்வது முக்கியம் என்றும் அவர் கூறினார். இறுதியில் நான் எனது டிரைவரையும் ‘ஸ்பாட் தாதா’வையும் அழைத்து: ‘ஒரு வீடியோ கிளிப் கசிந்துள்ளது.
நீங்கள் அதைப் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதைப் பாருங்கள். அதில் உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்றால் என்னைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் என்னுடன் வேலை செய்ய வேண்டியதில்லை. இதோ உங்கள் சம்பளம், நீங்கள் போகலாம்’ என்று கூறினேன்.”
தொடர்ந்து இருவரும் என்னைப் பாதுகாப்பதாக உறுதி அளித்தனர். “அப்போது நான் ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தேன். அதனால் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. சூழ்நிலை மிகவும் சிக்கலாகலாம். எனது திரைவாழ்க்கையின் ஒரு முக்கியமான முடிவைப் பயம் தீர்மானித்தது. நான் செய்ய விரும்பிய ஒரு புராஜெக்ட்டில் இருந்து அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக விலக வேண்டியிருந்தது.
திரைவாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை எடுக்கும்போது பயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது அதுவே முதல் முறை என்றும் ராதிகா கூறினார். தனது முடிவின் காரணமாக முழு குடும்பத்தையும் ஆபத்தில் தள்ள தான் விரும்பவில்லை என்றும், பயத்தின் அடிப்படையில் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்ததற்காகத் தான் ‘வெட்கப்படுவதாகவும்’ அவர் தெளிவுபடுத்தினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.