Times of Puducherry
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதா அம்பிகா இருவரும் தற்போது சொத்து பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா தனது பெரியரில் ரூ46 கோடி செக் மோசடி செய்துவிட்டதாக ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்பிகா, சென்னை வளசரவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் தனது தங்கை ராதா அளித்துள்ள புகார் மீது விளக்கம் அளித்த அம்பிகா, குடும்பத்தின் “குழந்தையைப் போன்ற ஏ.ஆர்.எஸ் கார்டன் (ARS Garden) சொத்து சரியாகப் பிரிக்கப்படவில்லை, அந்தச் சொத்தை ராதா தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். அந்தச் சொத்து தொடர்பாகத் எனக்கு சுமார் ரூ97 கோடி வர வேண்டியுள்ளது.
அந்த சொத்தில் நான் இன்னும் ஒரு பங்காதாரராக இருக்கும் நிலையில், அந்தச் சொத்தின் மீது எவ்வாறு கடன் பெற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், காசோலைச் சர்ச்சை குறித்துப் பேசிய அம்பிகா, ராதா தான் காசோலையைக் கொடுத்தார். பின்னர் அவரே அதன் பணப் பரிவர்த்தனையை நிறுத்திவிட்டார். ஆனால் காசோலை எனக்குத் தான் பணம் இல்லாமல் திரும்பியது, அதனால் பணத்தை நான் தான் இழந்தேன். அப்படியிருக்கும்போது, நான் தான் புகார் அளித்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஒரு குடும்பப் பிரச்சனைக்காகச் செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பிரச்சனை வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே தான் இவ்வளவு காலம் அமைதி காத்திருந்தேன். ஏ.ஆர்.எஸ் கார்டனுக்காக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அணுகினோம். அவரே இந்தச் சொத்திற்கு இந்தப் பெயரைப் பரிந்துரைத்தார். அந்தச் சொத்தை உருவாக்கத் எங்கள் குடும்பம் கடுமையாக உழைத்தது, அதில் எனக்குப் பெரும்பங்கு உள்ளது.
தற்போது ஏ.ஆர்.எஸ் கார்டனின் பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதமே மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர் (CSR) பெறப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் பேசிய அம்பிகா, இது குறித்து தங்கள் குடும்பத்தினர் ராதாவிடம் தெளிவுபடுத்தக் கேட்டதாகக் கூறினார். ஆனால், இந்தப் பிரச்சனை தொடர்பாகத் தன் சகோதரியைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் “நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அம்மாவின் விருப்பம். சமரசப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் இருந்தால், நானும் என் சகோதரரும் பேசத் தயாராக இருக்கிறோம், என்னைத் திருடி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிறுவயதிலிருந்தே என் சகோதரிகளுக்காகத் தான் பல காரியங்களைச் செய்திருக்கிறேன். மேலும், படிக்காதவன் திரைப்படத்திலிருந்து தான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடல் ராதாவைக் குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏ.ஆர்.எஸ் கார்டன் பெயர் பலகை மாற்றப்பட்டதைக் கண்டது தனக்கு அளப்பரிய மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறி அம்பிகா தனது பேச்சை முடித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.