Times of Puducherry

இந்த 6 பிரச்சனை உங்க குக்கரில் இருக்கிறதா? குக்கரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 4:05 PM
6 problems with your pressure cooker it may be time to replace it

தினசரி சமையலில் அத்தியாவசியமான பிரஷர் குக்கர்கள், சரியான பராமரிப்பு இல்லாதபோதும் அல்லது சேதமடைந்த உதிரிபாகங்களைப் பயன்படுத்தும்போதும் ஆபத்தான வெடிபொருளாக மாறக்கூடும் என நுகர்வோர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அண்மைக்காலமாக சமையலறை குக்கர் வெடிப்புகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், பிரஷர் குக்கரை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

மூடி மற்றும் உடற்பகுதி வளைவு

குக்கரின் மூடி சரியாகப் பொருந்தாவிட்டாலோ, விளிம்புகளில் வளைவு அல்லது பள்ளம் இருந்தாலோ உள்ளே இருக்கும் நீராவி சீரற்ற முறையில் வெளியேறி, திடீரென வெடித்து சிதறும் அபாயத்தை உருவாக்குகிறது.

உடற்பகுதி விரிசல்கள்

குக்கரின் முக்கிய உடற்பகுதியில் சிறிய விரிசலோ அல்லது ஆழமான பள்ளங்களோ ஏற்பட்டால், அது அதிக அழுத்தத்தைத் தாங்கும் வலிமையை இழந்துவிடும். இதுபோன்ற சூழலில் உதிரிபாகங்களை மட்டும் மாற்றாமல் குக்கரையே மாற்றுவது நல்லது.

மத்திய அரசின் IS 7466:2023 கட்டாய உத்தரவு

குக்கரில் அழுத்தம் ஏறிய பிறகும் விளிம்பிலிருந்து நீராவி கசிந்தால், கேஸ்கெட் பழையதாகிவிட்டது அல்லது தளர்ந்துவிட்டது என்று பொருள். இந்திய அரசு வெளியிட்ட IS 7466:2023 விதிமுறைகளின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து பிரஷர் குக்கர் கேஸ்கெட்டுகளும் ISI முத்திரை பெற்றிருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு

தரமற்ற மற்றும் போலி ரப்பர் கேஸ்கெட்டுகள் அதிக வெப்பத்தில் உருகி நச்சுத்தன்மையை உணவில் கலக்கக்கூடும் என்பதால், உங்கள் குக்கர் மாடலுக்குப் பொருத்தமான ISI சான்றளிக்கப்பட்ட ‘ஃபுட் கிரேட்’ கேஸ்கெட்டுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

பாதுகாப்பு வால்வு – வென்ட் பைப் அடைப்புகள்

குக்கரில் விசில் குழாய் (Vent Pipe) உணவுப் பொருட்களால் அடைப்படும் போது, அசம்பாவிதத்தைத் தவிர்க்க இந்த பாதுகாப்பு வால்வே நீராவியை வெளியேற்றுகிறது.
வால்வில் துரு, விரிசல் அல்லது அழுக்கு அடைத்திருந்தால் அது ஆபத்தான நேரத்தில் செயல்படாமல் போகலாம்.

விசில் அசாதாரண சத்தம்

குக்கர் வழக்கம் போல இல்லாமல் அதிக சத்தத்துடன் ஆவியை வெளியேற்றினாலோ அல்லது விசில் வராமல் கசிவு மட்டுமே இருந்தாலோ உடனே அடுப்பை அணைக்க வேண்டும்.

அலட்சியப் பழக்கங்களும் நிபுணர்களின் எச்சரிக்கையும்

தளர்ந்த கைப்பிடியுடன் சூடான குக்கரைத் தூக்கும் போது, கைநழுவி விழுந்து கடுமையான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குக்கரில் 3/2 பங்கிற்கு மேல் உணவையோ அல்லது தண்ணீரையோ நிரப்பக் கூடாது. பருப்பு, அரிசி போன்ற பொருட்கள் வேகும்போது பொங்கி வென்ட் பைப்பை அடைப்பதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாகிறது.

சமையலறை பாதுகாப்பு வழிகாட்டுதல்

சமையலின் போது ஏதேனும் அசாதாரண கசிவு அல்லது சத்தம் கேட்டால், ஒருபோதும் குக்கரின் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றி உடனடியாகத் திறக்க முயற்சிக்காதீர்கள். அடுப்பை அணைத்துவிட்டு, அழுத்தம் தானாக முழுமையாக வெளியேறும் வரை காத்திருந்து அதன் பின்னரே திறக்க வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top