Times of Puducherry

நல்ல மதிப்பெண் பெற்ற காவலர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கும் விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 10:09 PM
police-officials-high-mark-scoring-children-got-cash-award

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பான முறையில் தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களில் நல்ல மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசு வழங்கும் விழா காவல் தலைமையகத்தில் காவல்துறையின் இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பரிசு பெற்ற குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 25,000 இரண்டாவது மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 15,000 மூன்றாம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும் புதுச்சேரி காவலர் நல சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இந்த விழாவில் சிறப்பான முறையில் தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களில் வந்த மாணவர்களுக்கு மேற்படியான பரிசு வழங்கப்பட்டது.

நல்ல மதிப்பெண் பெற்ற காவலர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கும் விழா

அதேபோல் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 20,000 இரண்டாவது மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 15,000 மூன்றாம் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ரூபாய் 10,000 நமது சங்கத்திலிருந்து வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் CBSE மற்றும் State Board எழுதிய மாணவர்கள் 13 பேர் இந்த பரிசினை பெற்றுக் கொண்டனர். பரிசினை பெற்றுக்கொண்ட
குழந்தைகள் தங்களது அனுபவங்களை காவல்துறை இயக்குனர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதேபோல் பெற்றோர்களாகிய
காவல்துறை சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் தங்களது கருத்துக்களை காவல்துறை இயக்குனர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் சிறப்பான முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை வாழ்த்திய நமது மதிப்பிற்குரிய காவல்துறை இயக்குனர் அவர்கள் இதுபோன்று காவல்துறை நல சங்கத்தின் மூலம் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் இருந்தால் மாதம் ரூபாய் ஆயிரமும் 85 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண்
இருந்தால் மாத ரூபாய் 500 ரூபாயும், மேற்படிப்பு படிக்கும் அதாவது Professional Course படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும், Arts Science Group படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் இருந்தால் மாதம் ரூபாய் ஆயிரமும் 85 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் இருந்தால் மாதம் ரூபாய் 500 ரூபாயும் ஊக்கத்தொகை கொடுக்கும் விபரத்தினை தெரிவித்தார்.

மேலும். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள Study Centre – காவல்துறையை சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் திருவிழா காலங்களிலும் அல்லது வேறு ஏதாவது ஒரு சூழ்நிலையில் வீட்டில் படிக்க இயலாமல் இருக்கக்கூடிய நிலையில் இந்த Study Centre -வந்து படித்து பயன்படுத்தி கொள்ளுமாறு காவல்துறையின் இயக்குனர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

மேலும் காவல்துறையில் உள்ள காவலர்களின் குழந்தைகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டு இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார். மேற்படி பரிசு வழங்கும் விழாவில் காவல்துறையின் துணைத் தலைவர் சத்திய சுந்தரம், காவல்
முதுநிலை கண்காணிப்பாளர்கள் பயிற்சி மற்றும் நலவழி ராஜேந்திர குமார் குப்தா , சட்டம் மற்றும் ஒழுங்கு கலைவாணன், போக்குவரத்து
பிரிவு திவ்யா மற்றும் காவல் அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top