Times of Puducherry
கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் 2-ம் பாகமாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்தியன் 3 படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது லைகா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியன் 3 படப் போஸ்டரையும் வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், சேனாபதி மீண்டும் எழுச்சி பெற்று வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் பெரும் தோல்விக்குப் பிறகு ‘இந்தியன் 3’ கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ‘இந்தியன் 2’ வெளியான பிறகு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மூன்றாம் பாகம் எடிட்டிங்கில் இருந்தது. 2019 முதல் இரண்டு படங்களின் தயாரிப்பிலும் தொடர் தாமதங்களும், படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனைகளும் ஏற்பட்டன.
மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து வெளியீட்டிற்குத் தயார்படுத்த சுமார் 50 கோடி ரூபாய் இயக்குனர் ஷங்கர் கேட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் ‘இந்தியன் 2’ சந்திப்பிற்குள்ளான இழப்புகள் மற்றும் நீண்ட தயாரிப்புக் காலம் காரணமாக கூடுதல் செலவை ஏற்க லைகா புரோடக்ஷன்ஸ் தயக்கம் காட்டியதாகவும் கூறப்பட்டது.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘இந்தியன் 2’ படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய, ‘இந்தியன் 3’ திரைப்படத்தை நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய தகவல்களின்படி, மூன்றாம் பாகம் திரையரங்கிலேயே வெளியாகும். ‘இந்தியன் 2’ முடிகையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதியின் முன்னோடிக் கதையே (Prequel) ‘இந்தியன் 3’. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை இப்படம் பேசுகிறது. வீரசேகரன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்க, அம்ருதவல்லியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
முன்னதாக இந்தியன் முதல் பாகத்தில் நடிகை சுகன்யா அம்ருதவல்லியாக நடித்திருந்தார். நாற்பது வயது நபராக கமல்ஹாசன் இந்தியன் மூன்றாம் பாகத்தில் தோன்றுகிறார்.
Senapathy is back with zero tolerance. 🔥 The resurgence begins in #Indian3 🇮🇳 War Mode. ⚔️ Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @anirudhofficial #Siddharth @MSKajalAggarwal @priya_Bshankar @actorsimha @iam_SJSuryah @dop_ravivarman @muthurajthangvl @sundarksam @teamaimpr #Hindustani3 🇮🇳 #Bharateeyudu3 🇮🇳 #WarMode— Lyca Productions (@LycaProductions) October 8, 2026
Senapathy is back with zero tolerance. 🔥 The resurgence begins in #Indian3 🇮🇳 War Mode. ⚔️ Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @anirudhofficial #Siddharth @MSKajalAggarwal @priya_Bshankar @actorsimha @iam_SJSuryah @dop_ravivarman @muthurajthangvl @sundarksam @teamaimpr #Hindustani3 🇮🇳 #Bharateeyudu3 🇮🇳 #WarMode
‘இந்தியன் 2’ திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களைப் பெற்றது. சேனாபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மீண்டும் நடித்த நிலையில், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் பிற முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் மேக்கப்பும், கதையில் புதுமையில்லாததுமே படத்திற்குப் பின்னடைவாக அமைந்தது.
இந்தியன் இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகத்திற்காகவே தான் அதிகம் காத்திருப்பதாகக் கமல்ஹாசன் கூறியிருந்தார். அப்படியென்றால், இரண்டாம் பாகத்தின் குறைகளைப் போக்கும் வகையில் ஷங்கர் மூன்றாம் பாகத்தை உருவாக்கியிருப்பார். ‘இந்தியன் 3: வார் மோட்’ (Indian 3: War Mode) என்பதே மூன்றாம் பாகத்தின் தலைப்பாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.