Times of Puducherry

திருச்சியில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி: திரளானோர் பங்கேற்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:36 PM
trichy-district-women-chess-tournament

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி, திருச்சி மாவட்ட செஸ் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8, 10, 13, 18, 18 வயது மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது செஸ் திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.

திருச்சியில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி: திரளானோர் பங்கேற்பு

போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா கல்லூரியின் மாணிக்க விநாயகம் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுதாமதி வரவேற்றார்.

திருச்சியில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி: திரளானோர் பங்கேற்பு

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி. அல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்ததுடன், மேலும், உருமுதனலட்சுமி குழும கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மேஜர் டாக்டர் என்.எஸ்.சிவகுமார், திருச்சி மாவட்ட செஸ் சங்க செயலாளர் தினகரன், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். மாணவிகளின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top